May 12, 2026

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு—-

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழையினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான வீதி வெள்ள நீரினால் உடைந்ததையடுத்து  அவ்வீதியின் ஊடான போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை (12) முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக,

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு—- Read More »

காத்தான்குடியில் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

(கனகராஜா சரவணன்) ) போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும்  தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில்  யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று செவ்வாய்கிழமை (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கடந்த 4ம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார்  மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி வேணங்களை சோதனையிட்டனர் இதன்போது கைது

காத்தான்குடியில் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது Read More »

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த “சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் நேற்று விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் Read More »

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

பாறுக் ஷிஹான் கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி இன்று எதிர்ப்பு தெரிவித்து  சாய்ந்தமருது பகுதி மீனவர்கள்  படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பொராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது  பல மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து ஒரு காலப்பகுதிக்கு

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம் Read More »

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி

பாறுக் ஷிஹான் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்  தலைமையில், பிராந்தியத்தின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த உள்ளூராட்சி மன்றங்கள் இந்த விசேட வேலைத்திட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச சபை,நாவிதன்வெளி பிரதேச சபை,நிந்தவூர் பிரதேச

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி Read More »

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்

பாறுக் ஷிஹான் ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவின்    நிந்தவூர் வருகையை முன்னிட்டு  அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2026ஆம்

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம் Read More »

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் “கஞ்சி வாரம்”: வலி சுமந்த உறவுகள் கண்ணீருடன் பங்கேற்பு

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 17-வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நினைவேந்தல் நிகழ்வான “கஞ்சி வாரம்” இன்று (12) உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை மக்களுக்கு வழங்கி நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். 2009-ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, உணவின்றியும் குடிநீரின்றியும் தவித்த தமிழ் மக்களின் உயிர் காக்கும் உணவாகத் திகழ்ந்த கஞ்சியை நினைவுகூரும்

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் “கஞ்சி வாரம்”: வலி சுமந்த உறவுகள் கண்ணீருடன் பங்கேற்பு Read More »

தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

நமது நிருபர் சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, பல மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து ஒரு காலப்பகுதிக்கு பாதிக்கப்பட்டது. “எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்”, “உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை

தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம் Read More »

சாய்ந்தமருது பகுதியில்  தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

பாறுக் ஷிஹான் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக்  தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா  பங்கேற்புடனும் நடைபெற்றது. இதன் போது தண்டேயல் வீதி,பலாஹ் பள்ளி வீதி,தோணா ஈஸ்ட் (East) வீதி,போக்கடி குறுக்கு வீதி பின்வரும்

சாய்ந்தமருது பகுதியில்  தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு Read More »

பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. குறித்த பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இன்று இவ்விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது பாடசாலை வளாகங்கள், நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்கு சாதகமான சூழல்கள் என்பன ஆய்வு செய்யப்பட்டன. நுளம்பு பெருக்கம் காணப்பட்ட மற்றும் சுகாதார குறைபாடுகள்

பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை Read More »