May 6, 2026

மட்டக்களப்பில் 15 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 29 வயது இளைஞன் அதிரடி கைது!

மட்டக்களப்பு: காதல் ஆசை வார்த்தை கூறி 15 வயதுடைய பாடசாலை மாணவியைத் தனி இடத்திற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 29 வயதுடைய இளைஞன் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவன், 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். கடந்த செவ்வாய்க்கிழமை (05), குறித்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆள் நடமாட்டமில்லாத ஒரு பகுதிக்கு வரவழைத்த

மட்டக்களப்பில் 15 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 29 வயது இளைஞன் அதிரடி கைது! Read More »

கைபேசி கவருக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருள்: பௌத்த துறவி ரங்கலவில் கைது!

மெனிகின்ன: இலங்கையின் ரங்கல (Rangala) பிரதேசத்தில் மெனிகின்ன பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பௌத்த துறவி ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு: சமய வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறான போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைபேசி கவருக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருள்: பௌத்த துறவி ரங்கலவில் கைது! Read More »

வித்தியா படுகொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (06) உறுதிப்படுத்தியுள்ளது. தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை விசாரித்த, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்! Read More »

வாகரையில் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்.

மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் மீன்மதி செயற்றிட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்ப நிபுணர் குணநேசராஜா பிரதீஷ் தெரிவித்தார். வாகரையிலுள்ள கிரிமிச்சைக் குளத்தில் ஒரு தொகுதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு அங்குள்ள உள்ளுர் மீனவ சங்கங்கள், பயனாளிகளான பெண்கள் உட்பட கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. நிலைபேறான, காலநிலைக்கு இசைவான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மூலம் பிரதேச மீனவக்

வாகரையில் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம். Read More »

தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்: விஜய்யின் ‘த.வெ.க’ ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) ஆட்சியமைக்க, இந்திய தேசிய காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் (Girish Chodankar) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் காங்கிரஸ் தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற மற்றும் சமூக நலனை முன்னிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காக வழங்கிய தெளிவான மற்றும் வலுவான

தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்: விஜய்யின் ‘த.வெ.க’ ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு! Read More »

பதவியவில் அதிர்ச்சி: மகளைச் சீரழிக்கக் காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் கைது!

பதவிய: இலங்கையின் பதவிய பகுதியில் தனது கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்ததைக் கண்டும் அதனை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்த கொடூரத் தாய் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அந்த நபர் பெண்ணின் மகளைத் தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கிராம மக்களுக்கும் உறவினர்களுக்கும் சந்தேகம்

பதவியவில் அதிர்ச்சி: மகளைச் சீரழிக்கக் காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் கைது! Read More »

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் .

(நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (06.05.2026) உற்சாகமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மழலைகள் நான்கு இனங்களின் (தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ) பாரம்பரிய கலாசார உடைகளை அணிந்து கலந்து கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது. பல்வகை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வண்ணம் மாணவர்கள் அணிந்திருந்த ஆடைகள் நிகழ்விற்கு வண்ணமயமான தோற்றத்தையும் ஒற்றுமையின் செய்தியையும் எடுத்துரைத்தன. புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகள், பாடல்கள், நடனங்கள் மற்றும்

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் . Read More »

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் செவ்வாய்கிழமை (05.05.2026) இடம்பெற்றது. தமிழ்பாட இணைப்பாளர் பு.சதீஷ்குமாரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இப்போட்டியில் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று, கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றினர். போட்டி நிறைவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டனர். ஆரம்ப நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.க.சுபாகரன், திருமதி தே.உதயகரன்,

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி. Read More »

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 29 வயதுடையவர் கைது

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 29 வயதுடையவர் கைது (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது இளைஞன் ஒருவரை பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை (05)  கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29 வயதுடைய ஆண் ஒருவர் காதலிப்பதாக கூறி அவரை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 29 வயதுடையவர் கைது Read More »

மட்டக்களப்பில் பிரித்தானிய, கனேடிய தூதுவர்களுடன் தமிழ் அரசுக் கட்சி முக்கிய சந்திப்பு.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (04.05.2026) மட்டக்களப்பிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு, தற்போதைய

மட்டக்களப்பில் பிரித்தானிய, கனேடிய தூதுவர்களுடன் தமிழ் அரசுக் கட்சி முக்கிய சந்திப்பு. Read More »