வவுனியா: வவுனியா, தோனிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவம் (தேர்த்திருவிழா) கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.06.2026) அன்று மிக விமரிசையாகவும் பக்திப்பூர்வமாகவும் நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ நாகபூசணி அம்மன் உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வில் வவுனியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு, “அரோகரா” கோஷங்களுடன் பக்திப் பெருக்குடன் தேரை வடமிழுத்து அம்மனை வழிபட்டனர்.





Views: 97




