வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

vadivel shagthivel

பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி திட்டத்தில்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(02.11.2026) பிரதேச செயலாளர் திருமதி ந.சத்யானந்தி  தலைமையில் மண்முனை மேற்கு  சமுர்த்தி வங்கி கட்டிடத்தில் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வார உதவிகளை வழங்கி வைத்தார்.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது விவசாய உபகரணங்கள், செங்கல் உற்பத்தி செய்யும் இயந்திரம், வியாபார உபகரணங்கள், போன்ற பல வாழ்தாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை மேற்கு சமுர்த்தி வங்கி சங்க தலைமையக முகாமையாளர் கே.தங்கதுரை வங்கியின் ஊழியர்கள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த பத்து வருடங்களாக துவிச்சக்கர வண்டியில் வியாபார மேற்கொண்ட ஒரு பயனாளிகளுக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.  

Share the Post: