• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள்.

img 20260403 wa0014

கல்முனையில் கல்வி வலய கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசியப் பாடசாலை) 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து கல்வி துறையில் தனது மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களில் 130 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 142 மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர்.மேலும், 2022/2024 காலகட்டத்தில் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பான்மையானோர் உயர் தரப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன், பல மாணவர்கள் மாவட்ட மற்றும் தீவு மட்டத்திலும் முன்னிலைப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌதீக விஞ்ஞான துறை மற்றும் பொறியியல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் மாவட்ட அளவில் இப்பாடசாலை மாணவர்கள் முதல் நிலை அடைந்துள்ளனர்.பாடசாலை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சி, மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவை இச்சாதனையின் பின்னணியில் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்காக பாடசாலை நிர்வாகம் அனைத்து மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் மற்றும் ஆசிரியர்களையும் வாழ்த்தி, எதிர்காலத்திலும் இதேபோன்ற சாதனைகள் தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளது. “Proud to be a Carmelian” எனும் பெருமிதக் கூற்று மீண்டும் ஒருமுறை நனவாகியுள்ளது.

Share the Post: