ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு- வரப்பத்தாஞ்சேனையில் “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி
பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி (07)வரிப்பத்தாஞ்சேனையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காம பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,

