October 27, 2026

100வருடங்கள் பழமை வாய்ந்த  தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் மரம் முறிந்து வீழ்ந்தது

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் இருந்த 100வருடங்கள் பழமை வாய்ந்த மரமொன்று இன்று (26)அடியோடு முறிந்து வீழ்ந்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் எனும் நாமத்தை பரைசாற்றும் 100 ஆண்டுகால வரலாறுகளை கொண்ட பழமையான மரமே இவ்வாறு வீழ்ந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து, கோவிலின் வரலாற்றையும் நினைவுகளையும்

100வருடங்கள் பழமை வாய்ந்த  தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் மரம் முறிந்து வீழ்ந்தது Read More »

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை  தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

(கனகராஜா சரவணன்) 20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை  ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூர் தன்னாமுனை கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும்; 2 மாதங்களை கொண்ட அக்விவ் விகான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான இன்று பகல்11.00

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை  தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு- Read More »

திருக்கோவில் கிணற்றில் T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு!

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகப் பொலிஸார் நடவடிக்கை – மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுப்பு   [அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்] அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, T-56 ரக தோட்டாக்கூடுகள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில்

திருக்கோவில் கிணற்றில் T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு! Read More »

 கவந்தீச யானைக்கு அஞ்சலி நிகழ்வு

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்] இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த ‘கவந்தீச’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் (25) நடைபெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வை அம்பாறை சாஸனாரக்ஷக பலமண்டலத்தின் செயலாளரும், நாமல் ஓயா கல்லூரியின் பிரதி அதிபரும், கல் ஓயா நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நாமல் தாலவ சைலபாம்பராம விகாரையின் ஸ்தாபகருமான வணக்கத்திற்குரிய சாஸ்திரவேதி கம்பஹ நாரத தேரர்

 கவந்தீச யானைக்கு அஞ்சலி நிகழ்வு Read More »

பொத்துவில் ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழப்பு: மின்சாரம் தாக்கியதா என வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணை!

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]அம்பாறை மாவட்டம், பொத்துவில் – ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, யானை உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த யானை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட நேரடி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் மற்றும்

பொத்துவில் ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழப்பு: மின்சாரம் தாக்கியதா என வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணை! Read More »