சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்த விசேட ஆயத்தக் கலந்துரையாடல்!
பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (19) இரவு சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அமைப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான எம். பாமி மன்சூர் அவர்களின் தலைமையில் இக் கலந்தரையாடல் மிகச் சிறப்பாக

