September 13, 2026

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

கனகராஜா சரவணன்) மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 12 மட்டக்களப்பில் நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) இராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் அவர்களால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைத்தார். இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு Read More »

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து: மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்

மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் பாறுக் ஷிஹான்அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்டோருக்கு அருகாமையில் இயங்கி வரும் ‘LU LU’ நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட மின் ஒழுக்கு (மின்கசிவு) காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனைத்

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து: மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர் Read More »

ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது

 பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர்   விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இத்திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை (11) மாலை  முன்னெடுக்கப்பட்டது. திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த இச்சோதனையின்போது, சந்தேகநபரிடமிருந்து 15

ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது Read More »

பாலமுனைப் பிரதான வீதியில் கோர விபத்து- குடும்பஸ்தர்   சம்பவ இடத்தில்  பரிதாப பலி

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில்  பாலமுனைப் பகுதியில் (12)    இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை – 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் சமது முபாரிஸ் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே  சம்பவ இடத்தில்  உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் மேலதிக

பாலமுனைப் பிரதான வீதியில் கோர விபத்து- குடும்பஸ்தர்   சம்பவ இடத்தில்  பரிதாப பலி Read More »

செட்டிபாளையத்தில் மீண்டும் ஆரம்பித்தது காட்டு யானைகளின் அட்டகாசம்

கடந்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் காட்டுயானைகள் சேதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இவ் வருடமும் அந்த இடத்திற்கு வந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் நேற்றிரவு (12) காட்டுயானைகள் செட்டிபாளையத்திற்குள் ஊடுருவி மக்களின் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிபாளையத்தில் மீண்டும் ஆரம்பித்தது காட்டு யானைகளின் அட்டகாசம் Read More »

அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் குடமுழுக்கு -பிரதான கலசம் தாங்கிய யானை ஊர்வலம்

கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி குடமுழுக்கு விழாவை பிரதான கலசம் தாங்கிய யானை ஊர்வலம் மாலை இடம்பெற்றது.இதேநேரம் மஹாயாகப் பெருஞ்சாந்தி குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு மேல் காரியசித்தி கணபதி ஆராதனை கிரியைகள் ஆம்பமானதுடன்; மாலை பத்திரகாளி அம்மனின் பிரதான கலசம் தாங்கிய யானை ஊர்வலம் இடம்பெற்றது.குட்டிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து விமர்சையாக ஆரம்பமாகி

அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் குடமுழுக்கு -பிரதான கலசம் தாங்கிய யானை ஊர்வலம் Read More »

தென்கிழக்கு மருத்துவப் பீடத்தை மல்வத்தையில் அமைப்பதே சிறந்தது- உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் 

 பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட மருத்துவப் பீட அமைவு மற்றும் கற்பித்தல் வைத்தியசாலைத் தேர்வு தொடர்பில் இலங்கை உலமா கட்சி மிக முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. இது குறித்து இலங்கை உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது  “மூன்று சமூகங்களுக்கும் பொருத்தமான மையப் பகுதியான மல்வத்தையில் மருத்துவப் பீடத்தை அமைத்து, அம்பாறை பொது வைத்தியசாலையை அதன் கற்பித்தல் (மருத்துவப் படிப்புக்கான) வைத்தியசாலையாக இணைப்பதே மிகவும் பொருத்தமான தீர்வாகும். இன

தென்கிழக்கு மருத்துவப் பீடத்தை மல்வத்தையில் அமைப்பதே சிறந்தது- உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்  Read More »