புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை: கல்வி அதிகாரிகளுக்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவுறுத்தல்!
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர், நாட்டின் அனைத்துப் பாடசாலை வளாகங்களிலும் விசேட டெங்கு மற்றும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டில் நிலவும் மழை உடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு, பாடசாலை வளாகங்களில் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் பாடசாலை சூழலைச் சுத்தப்படுத்தும் பணிகளை விரைந்து




