July 31, 2026

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா தீர்த்தோற்சவத்துடன் நிறைவு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, நேற்று வியாழக்கிழமை (30) மாணிக்கக் கங்கையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது. சிறப்பம்சம்: தொன்றுதொட்டுப் பேணப்பட்டு வரும் கலாசார பாரம்பரியங்களின்படி, மாணிக்கக் கங்கையில் இறைவனுக்குத் தீர்த்தமாடி பக்திப் பெருக்கோடு விழா நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா தீர்த்தோற்சவத்துடன் நிறைவு! Read More »

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு அமெரிக்காவின் RM Parks நிறுவனம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றது பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிலையத்தினை, அமெரிக்காவின் ‘ஆரெம் பார்க்ஸ்’ (RM Parks Inc.) நிறுவனம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்று (30) திறந்து வைத்தது. மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், RM Parks Pvt Ltd மற்றும் Shell நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எல். எட்வர்ட் சுசந்த சில்வா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு Read More »

மாணவர்களுக்கான தலசீமியா மற்றும் சுகாதாரப் பரிசோதனை

மல்ஹருஸ் சம்ஸ் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்றா நோய் மற்றும் தலசீமியா பரிசோதனை முகாம் பிராந்தியத்திலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட விசேட மருத்துவக் கட்டமைப்பு: சுகநலக் கல்வியும் வழங்கி வைப்பு மாணவர்களுக்கான தலசீமியா மற்றும் சுகாதாரப் பரிசோதனை. பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட   மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தொற்றா நோய் (NCD) பரிசோதனை மற்றும் தலசீமியா (Thalassemia) பரிசோதனை முகாம் இன்றைய தினம் (30)  நடத்தப்பட்டது. சாய்ந்தமருது

மாணவர்களுக்கான தலசீமியா மற்றும் சுகாதாரப் பரிசோதனை Read More »

தேசிய விருது ஆளுமைகளான றுத்றா அமிர்தரெத்தினம், வேட்டையன் இம்ரான் கூட்டு முயற்சியில் உதயமாகிறது ‘Cine Serendib’ சினிமா ஊடகத் தளம்!

பாறுக் ஷிஹான் இலங்கைத் திரைத்துறையின் செய்திகள் மற்றும் நடுநிலையான விமர்சனங்களை இரு மொழிகளிலும் கொண்டு சேர்க்க விசேட நடவடிக்கை இலங்கைத் திரைத்துறையின் அதிகாரப்பூர்வச் செய்திகள் மற்றும் நடுநிலையான திரைப்பட விமர்சனங்களை இரு மொழிகளிலும் உலகெங்கும் வாழும் தமிழ் மற்றும் சிங்கள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், ‘Cine Serendib’ என்ற புதிய பிரத்தியேக சினிமா ஊடகத் தளம் உத்தியோகபூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் திரையுலகில் தங்களது தனித்துவமான கலைப் பங்களிப்பால் தேசிய மட்ட அங்கீகாரம் பெற்ற ஆளுமைகளான றுத்றா

தேசிய விருது ஆளுமைகளான றுத்றா அமிர்தரெத்தினம், வேட்டையன் இம்ரான் கூட்டு முயற்சியில் உதயமாகிறது ‘Cine Serendib’ சினிமா ஊடகத் தளம்! Read More »

வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து-சூழல், மண் வளம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க அவசர தீர்வுகள் தேவை.

பாறுக் ஷிஹான் இயந்திரமயமாக்கல், சட்டக் கட்டுப்பாடு மற்றும் மாற்றுப் பயன்பாடுகள் மூலம் வைக்கோல் எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயத்துறை அமைச்சுக்கு கோரிக்கை நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல் நிலங்களில் எஞ்சியிருக்கும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழிந்து மண் வளம் முற்றாகச் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், புகையின் தாக்கம்

வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து-சூழல், மண் வளம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க அவசர தீர்வுகள் தேவை. Read More »