April 29, 2026

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வுபாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(28)   அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக மட்டத்தில் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) பயிற்சி நெறியினை மேற்கொள்ளும்  பயிலுனர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நிலையத்தில் பொறுப்பதிகாரி  எம்.வை ஹரூன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பாவனையாளர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வுபாறுக் ஷிஹான் Read More »

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்

பாறுக் ஷிஹான் கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு படுத்திய கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினருக்கும் பொதுச் சந்தையில் உள்ள தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் எமது வர்த்த சங்க காரியாலத் தில் நடைபெற்றது இக்கலந்துரையாடலில் எதிர் வருகின்ற மே தின

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் Read More »

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில் , பாலமுனை, பிரதேசங்களில் திடீர் சோதனை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள இரவு நேர உணவகங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திடீர் சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை (27) இரவு முதல் இவ் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரமான

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில் , பாலமுனை, பிரதேசங்களில் திடீர் சோதனை Read More »

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

பாறுக் ஷிஹான் அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி மேம்பாடு மற்றும் வெள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு முக்கிய முன்மொழிவு ஆராயப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் Read More »

இளவயது மரணங்களை கட்டுப்படுத்த பாடசாலைகளின் பங்களிப்பும் அவசியம்- வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன்

பாறுக் ஷிஹான் நாட்டில் அதிகரித்து வரும் இளவயது மரணங்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வலியுறுத்தினார். வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் நிதியுதவியுடன் சாய்ந்தமருது வொலிவேரியன் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்திற்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள் வழங்கும் நிகழ்வு இன்று (28) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக

இளவயது மரணங்களை கட்டுப்படுத்த பாடசாலைகளின் பங்களிப்பும் அவசியம்- வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் Read More »

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது நிரந்தர புதிய அதிபராக எம். நெளஷாத் ஆதம்பாவா கடமையேற்பு.

பாறுக் ஷிஹான் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் – 1 சேர்ந்த ஏ.எம். நெளஷாத் கடந்த திங்கட்கிழமை (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) இருபதாவது புதிய அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்-I அதிகாரி ஏ.எம். நெளஷாத் இலங்கை கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டு வலயக் கல்வி

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது நிரந்தர புதிய அதிபராக எம். நெளஷாத் ஆதம்பாவா கடமையேற்பு. Read More »

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு (28) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்ற 9 பேர் கௌரவிக்கப்பட்டனர். முதலில் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் பாண்ட்

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு Read More »